மாதவிலக்கின்போது புரோஸ்டாகிளாண்டின்ஸ் (வலி உண்டாக்கும் இரசாயனங்கள்) மிக அதிகமாகச் சுரக்கிறது. இது இரத்த ஓட்டத்தில் கலந்து குடல்களுக்குச் சென்று குடல்களின் உட்புறச் சுவரில் எரிச்சல் ஏற்படுத்தும்போது குடல் வேகமாகச் சுருங்குவதால் மலம் இளகி வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

வயிற்றுப்போக்கும் மலம் இளகுதலும் (சில வேளைகளில் மாதவிலக்கு கால மலமிளகுதல் என்றும் அழைக்கப்படும்) மாதவிலக்கால் ஏற்படும் பொதுவான செரிமானப் பக்கவிளைவாகும். குமட்டலையும் வாந்தியையும் போல வயிற்றுப்போக்கும் புரோஸ்டாகிளாண்டின்ஸ் மிக அதிகமாகச் சுரப்பதோடு நேரடித் தொடர்புடையது ஆகும்.

புரோஸ்டாகிளாண்டின்ஸ் மிகையாகச் சுரப்பதை மாதவிலக்கு காலத்தில் உங்களுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு உறுதிப்படுத்துகிறது. அதாவது பிரைமரி டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படும் மாதவிலக்கு வலியால் நிச்சயமாகப் பெரும்பாலும் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

புரோஸ்டோகிளாண்டின்ஸ் வயிற்றுப்போக்கை எவ்வாறு ஏற்படுத்துகிறது:

  • தசைச் சுருக்கம் (அழுத்தம்): புரோஸ்டோகிளாண்டின்ஸ் உங்கள் குடலின் சுவர்களை மிக வேகமாகச் சுருங்க வைக்கிறது. மென்மையான குடல் தசைகள் வேகமாகச் சுருங்கும்போது ​​அது மலத்தை உங்கள் குடல் வழியாக மிக வேகமாகத் தள்ளுகிறது.
  • நீர்சுரத்தல் (வெளியேற்றம்): உங்கள் குடலில் மிகையாக இருக்கும் நீரையும் எலக்ட்ரோலைட்டுகளையும் (உப்பு, பொட்டாசியம் போன்றவை) குடலின் உட்புறச் சுவருக்குள் வெளியேற்ற குடலை புரோஸ்டோகிளாண்டின்ஸ் தூண்டுகிறது.
    • எலக்ட்ரோலைட்டுகள் என்றால் என்ன? எலக்ட்ரோலைட்டுகள் என்பவை மின்னூட்டம் கொண்ட இன்றியமையாத தாதுக்கள் ஆகும். அவை உங்கள் செல்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. அவை செரிமானத்தின் துணைப் பொருட்கள் அல்ல; அவை உங்கள் உடலில் ஏற்கெனவே இருக்கும் பல செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் தாதுக்கள் ஆகும்.
    • இதனால் ஏற்படும் விளைவு: குடல் அதிகப்படியான எலக்ட்ரோலைட்டுகளைச் சுரக்கும்போது ​​இயல்பாகவே நீரும் அதிகமாகச் சுரக்கிறது. திடீரன அதிகரிக்கும் நீர் மலத்தோடு சேர்த்து வெளியேற்றப்படுகிறது.
  • இதனால் உண்டாகும் முடிவு: உங்கள் குடல் மிக வேகமாகச் சுருங்குதல் (அழுத்தம்) மற்றும் மலத்தில் அதிக அளவில் நீர் இருத்தல் (வெளியேற்றம்) ஆகிய இரண்டும் சேர்ந்து நேரடியாக வயிற்றுப்போக்கிற்கு (இளகிய மலம் மற்றும் அடிக்கடி மலம் கழித்தல்) வழிவகுக்கிறது.

மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுப்போக்கை நிறுத்துதல்

உடனடி நிவாரணம் பெற இதற்கான காரணத்தில் கவனம் செலுத்த வேண்டும் – புரோஸ்டோகிளாண்டின்ஸ் மிக அதிகமாகச் சுரத்தல். புரோஸ்டோகிளாண்டின்ஸ் சுரப்பதை தடுக்க ஒரு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தான NSAID-ஐ (ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து) விரைவாக உட்கொள்ள வேண்டும்.

குடல் எரிச்சலைக் குறைக்க எளிமையான வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துங்கள்:

  • வெப்பமும் நீர்ச்சத்தும்: வெந்நீரை சிறிது சிறிதாகக் குடிக்கவும். வெதுவெதுப்பான திரவங்கள் முழு செரிமான மண்டலத்தையும் இதமாக்கி இளகிய மலத்தால் இழந்த நீரை மீண்டும் பெற உதவுகின்றன.
  • வயிற்று உப்புசத்தைக் குறைத்தல்: பெருங்காயத் தண்ணீர் (வெந்நீர் மற்றும் கறுப்பு உப்புடன் கலந்து) குடிக்கவும். இந்த பலனளிக்கும் வீட்டு வைத்தியம் வாயு, தசைப்பிடிப்புகள், துரிதமாகக் கழியும் இளகிய மலத்தை உண்டாக்கும் வாத தோஷம் ஆகியவற்றைத் தணிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த படத்தில் மாதவிலக்குக் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் விளக்கப்படுகின்றன. மேல்பகுதியில் ‘மாதவிலக்குக் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்குக் காரணம் என்ன?’ என்ற தலைப்பு காணப்படுகிறது. அதன் கீழ், புரோஸ்டாகிளாண்டின்ஸ் எனப்படும் மாதவிலக்கு வலியை உண்டாக்கும் இரசாயனங்கள் இரத்த ஓட்டத்தின் மூலம் குடலுக்கு சென்றால், குடல் விரைவாகச் சுருங்கி நீரை அதிகமாக வெளியேற்றுகிறது என்பதால் மலம் இளகி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது. மேலும், மாதவிலக்கு காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது உடல் அதிக அளவில் புரோஸ்டாகிளாண்டின்ஸை உற்பத்தி செய்கிறது என்பதற்கான அறிகுறி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக, உடனடி நிவாரணத்திற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் NSAID எனப்படும் ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் புரோஸ்டாகிளாண்டின்ஸின் மிகை உற்பத்தியைத் தடுக்க உதவும் என தகவல் வழங்கப்படுகிறது.

உங்கள் #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின்பயணம் இங்கே தொடங்குகிறது

ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான இந்திய இளம் பெண்களும் பெண்களும் தங்களது கடுமையான மாதவிலக்கு வலி (டிஸ்மெனோரியா) 'சாதாரணமானதுதான்' என்று கூறப்படுவதால் மௌனமாகத் துன்பப்படுகிறார்கள். அந்த மௌனத்தை உடைப்பதே எங்கள் நோக்கம். #ஸ்டாப்-தி-பீரியட்-பெயின் இயக்கம், 3 எளிய உண்மைகளின் மூலம் உங்களை வலுப்படுத்துகிறது.:

पीरियड दर्द कैलकुलेटर सेक्शन

எங்கள் மாதவிடாய் வலி கணக்கீட்டியை முயற்சிக்கவும்

உங்கள் மாதவிடாய் வலி உண்மையில் எவ்வளவு அதிகம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? சில கிளிக்குகளிலேயே, உங்கள் வலி இயல்பானதா அல்லது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறியா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

girl

பீரியட் வலியை லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

பீரியட் வலி ஒரு உண்மையான மருத்துவப் பிரச்சினை. ஒரு மகளிர் மருத்துவ நிபுணரை சந்தித்து #ஸ்டாப் த பீரியட் பெயின் ஐப் பெறுங்கள்.

Don't take period pain lightly